Show all

ஆய்வறிக்கையை சமர்பிக்கவில்லை! 15 ஆண்டுகளாக நடுவண் தொல்லியல் துறையினர் நடத்திய கீழடி ஆய்வில்

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி ஆய்வறிக்கையை நடுவண் தொல்லியல் துறையினர் சமர்ப்பிக்காதது, தமிழர் நாகரிகத்தை மறைக்கும் முயற்சியாக தோன்றுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர்,  கீழடியில் 15 ஆண்டுகளாக நடுவண தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருவதாகவும், ஆனால் இன்று வரை ஆய்வறிக்கையை சமர்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை உற்றுநோக்கும் போது, தமிழர் நாகரிகத்தை மறைக்கும் முயற்சியில் நடுவண் தொல்லியல் துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். மேலும் கீழடி ஆய்வறிக்கையை பெறுவதற்கு அறங்கூற்றுமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதியளித்தார்.

இதற்கு முன்னதாக கீழடி விவகாரத்தில்,  சித்தாந்த ரீதியில் வரலாற்று திரிபு நடந்தால் தமிழக அரசு எதிர்க்கும் என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,783.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.