Show all

விரைவில் அரசியலுக்கு வருகிறார்! நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும்

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்பபோவதாக சுவர்சித்திரங்கள் வரைப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி, அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். கீச்சுவில் கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு கூடியுள்ளது. 

ஆங்காங்கே சுவர்களில், 04,வைகாசி அன்று (மே 18) இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! வரவேற்கிறோம். அறிவுப்புக்காக காத்திருக்கிறோம் என்று வரையப்பட்டிருந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,783.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.