11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக அதிமுக பன்னீர்தான் கூறினார். இப்போது அவர்தான் துணை முதல்வர். அப்போதிருந்து இப்போது வரை தமிழக அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தது? 99 நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. 100-வது நாளில் வன்முறை ஏற்பட யார் காரணம்? ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அவர்களைப் பொறுத்தவரை இது சோதனை ஓட்டம்தான். இன்னும் நிறைய நடக்கும். இவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஆள்வதற்கு தமிழக அரசுக்கு யோக்யதை இல்லை. ஆகையால் நடுவண் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொன். ராதாகிருஷ்ணன் அவர்களே! நடவடிக்கை எடப்பாடி ஆட்சியை அகற்றும் முகமானதா? எடப்பாடியை கேடயமாக நிறுத்தி தமிழர் இனி உரிமைகளை கோரி போராட்டமே நடத்தக் கூடாது என்கிற வகைக்கானதா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



