31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாதம் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கு நீட்டித்து இருக்கின்ற நிலையில், தற்போது எழுந்துள்ள பல சிக்கல்களுக்கு, நடுவண் மாநில அரசுகள் உடனடி தீர்வு கண்டாக வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், தொழில்களை இயக்குவதற்கு அரசு பெருந்தொகையை நிதி உதவியாக அறிவித்து உள்ளன. அதுபோல, தமிழ்நாட்டில், தொழில்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மின் கட்டணம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அன்றாட உணவுக்கும் உறுதி இல்லை. எனவே, தொழிற்சாலைகள், வீடுகள் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நல வாரியங்களில் சில ஆயிரம் பேர்களே பதிவு பெற்று இருக்கின்றார்கள். அந்த வாரியங்களின் சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகை மிகக்குறைந்த நபர்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கின்றது. ஆனால், இலட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவுபெறாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாதம் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



