உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இந்தக் கொரோனா இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளை தொடங்கும் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது அச்சார வாழ்த்துக்கள். 31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இந்தக் கொரோனா இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா நுண்ணுயிரியால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது. 857 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 308 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் 1154 பேர்களுக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி உள்ளது. 27 பேர்கள் குணமடைந்துள்ளனர். 24 பேர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் 3-ம் இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 1075 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 பேர்கள் குணமடைந்துள்ளனர். 11 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் கொரோனா நிலவரம்:
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1985 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 217 பேர்கள் குணமடைந்துள்ளனர். 149 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் 29 பேர்களுக்கு பாதிப்பு. ஒருவர் பலியாகியுள்ளார்.
பிகாரில் 64 பேர்களுக்கு பாதிப்பு. 19 பேர்கள் குணமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
சண்டிகரில் 21 பேர்களுக்கு பாதிப்பு. 7 பேர்கள் குணமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
சட்டிஸ்கரில் 31 பேர்களுக்கு பாதிப்பு. 10 பேர்கள் குணமடைந்துள்ளனர்.
கோவாவில் 7 பேர்களுக்கு பாதிப்பு. 5 பேர்கள் குணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 516 பேர்களுக்கு பாதிப்பு. 44 பேர் குணமடைந்துள்ளனர். 25பேர்கள் பலியாகியுள்ளனர்.
அரியானாவில் 185 பேர்களுக்கு பாதிப்பு. 29 பேர் குணமடைந்துள்ளனர். 3பேர்கள் பலியாகியுள்ளனர்.
திரிபுராவில் 2 பேர்களுக்கு பாதிப்பு.
கேரளாவில் 376 பேர்களுக்கு பாதிப்பு. 179 பேர்கள் குணமடைந்துள்ளனர். 2பேர்கள் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் 804 பேர்களுக்கு பாதிப்பு. 21 பேர்கள் குணமடைந்துள்ளனர். 3பேர்கள் பலியாகியுள்ளனர்.
ஜார்கண்டில் 19 பேர்களுக்கு பாதிப்பு. 2 பேர்கள் பலியாகியுள்ளனர்.
லடாக்கில் 15 பேர்களுக்கு பாதிப்பு. 10 பேரகள் குணமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் 2 பேர்களுக்கு பாதிப்பு. ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார்.
மிஸ்ரோமில் ஒருக்கு பாதிப்பு
ஒடிசாவில் 54 பேர்களுக்கு பாதிப்பு. 12 பேர்கள் குணமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
பாணடிச்சேரி 7 பேர்களுக்கு பாதிப்பு. ஒருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார்.
சிறப்புத் தகுதி பிடுங்கப்பட்டு மற்ற மாநிலத்தவர்களும் பரவிய நிலையில், ஜம்மு காஷ்மீரில் 245 பேர்களுக்கு பாதிப்பு. 6 பேர்கள் குணமடைந்துள்ளனர். நான்கு பேர்கள் பலியாகியுள்ளனர்.
கர்நாடகாவில் 232 பேர்களுக்கு பாதிப்பு. 57 பேர்கள் குணமடைந்துள்ளனர். 6பேர்கள் பலியாகியுள்ளனர்.
பாஞ்சாப்பில் 151 பேர்களுக்கு பாதிப்பு. 5 பேர்கள் குணமடைந்துள்ளனர். 11பேர்கள் பலியாகியுள்ளனர்.
தெலுங்கானாவில் 504 பேர்களுக்கு பாதிப்பு. 43 பேர்கள் குணமடைந்துள்ளனர். 9பேர்கள் பலியாகியுள்ளனர்.
உத்தரகண்ட்டில் 35 பேர்களுக்கு பாதிப்பு. 5 பேர்கள் குணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 152 பேர்களுக்கு பாதிப்பு. 29 பேர்கள் குணமடைந்துள்ளனர். 7பேர்கள் பலியாகியுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசத்தில் 427 பேர்களுக்கு பாதிப்பு. 11 பேர்கள் குணமடைந்துள்ளனர். 7பேர்கள் பலியாகியுள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் 532 பேர்களுக்கு பாதிப்பு. 36 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 483 பேர்களுக்கு பாதிப்பு. 46 பேர்கள் குணமடைந்துள்ளனர். 5பேர்கள் பலியாகியுள்ளனர்.
அருணாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் மட்டும் பாதித்;துள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் 32 பேர்களுக்கு பாதிப்பு. 13 பேர்கள் குணமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 11 பேர்களுக்கு பாதிப்பு. 10 பேர்கள் குணமடைந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



