மதுரையை சேர்ந்த முதியவர், எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அதிகாரிகளுடன் வழக்கமான ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரி தொற்றுக்கு ஏற்கனவே 9 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் லண்டனில் இருந்து திரும்பிய சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், மற்றும் திருப்பூரை சேர்ந்த 48 அகவi நபர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். மதுரையைச் சேர்ந்த 54 அகவை முதியவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மதுரையை சேர்ந்த முதியவர், எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஒருவேளை அவருக்கு ஏற்பட்டுள்ள கெரோனா தொற்று சமூக பரவல் சார்ந்தது என்று அறியப்படுமானால், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான கூடுதல் கவனமும், விழிப்புணர்வும் மேற்கொள்ள வேண்டியதாயிருக்கும். அந்தக் கூடுதல் கவனமும், விழிப்புணர்வும் கீழ்கண்டவாறானதாக மேற்கொள்ள வேண்டியதாயிருக்கும்:-
அந்தக் காலங்களில் தமிழகத்தின் எந்தக் கிராமத்திலும் புதியதாக ஒரு நபர் ஊருக்கு வந்திருந்தால், கவனமாகவும் விழிப்புணர்வாகவும் எதிர்கொள்வார்கள். கிராமத்தில் நுழைந்த நபருக்கு ஒருவித அச்சமும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள தான் கிராமத்திற்கு வந்த அனைத்து உண்மைகளையும் நோக்கங்களையும் கக்கிவிடுவார். தவறான நபர் என்றறிந்தால் ஊர்மக்கள் அவரை மரத்தில் கட்டிப்போட்டு விட்டு பஞ்சாயத்தும் கூட்டி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



