தற்போது சென்னையில் பெய்து வரும் மழை வெளிப்புற மேகங்களால் ஏற்படுவது. வெறுமனே முன்னோட்டமே. அதிரடியை நாளை முதல் பார்க்கலாம். புயல் வெகு தொலைவில் இருப்பதால் விட்டுவிட்டுதான் மழை பெய்யும். அடர்த்தியான மேகங்கள் புயல் அருகே வரும்போது தான் அடர்த்தியான மேகங்கள் வரும். அப்போது விட்டு விட்டு மழை பெய்யாது. என்கிறார் தமிழ்நாடு வானிலையாளர் பிரதீப் ஜான். 09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நிவர்புயல் குறித்து தமிழ்நாடு வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவிப்பதாவது: இந்த நிவர் புயல் இலங்கைக்கு மேல் ஸ்டாலிங்கில் வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் ஒரு இடத்தில் நிற்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இது மெல்ல மெல்ல வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலையில் வடதமிழகத்தில் சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயல் மையப் பகுதியே 50 கி.மீ. விட்டம் கொண்டிருக்கும். காற்றின் வேகமானது மேற்கு பகுதியில் அதிகமாக இருக்கும். மகாபலிபுரத்தில் கரையை கடந்தால் சென்னையிலும் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, வடவிழுப்புரம், மரக்காணம், புதுவை, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்டவை புயலின் பாதையில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த இடங்களில் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தற்போது சென்னையில் பெய்து வரும் மழை வெளிப்புற மேகங்களால் ஏற்படுவது. வெறுமனே முன்னோட்டமே. அதிரடியை நாளை முதல் பார்க்கலாம். புயல் வெகு தொலைவில் இருப்பதால் விட்டுவிட்டுதான் மழை பெய்யும். அடர்த்தியான மேகங்கள் புயல் அருகே வரும்போது தான் அடர்த்தியான மேகங்கள் வரும். அப்போது விட்டு விட்டு மழை பெய்யாது. எப்போது புயல் கரையை கடக்கிறதோ அந்த சமயத்தில் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. எங்கு கரையை கடக்கிறதோ அந்த மையப்பகுதியில் மிக மிக கனமழை பெய்யும். அந்த சமயத்தில் எதிரே உள்ள சுவரை கூட பார்க்க முடியாது. கரையை நெருங்க நெருங்க மழையின் தீவிரம் அதிகரிக்கும். நாளை மதியம், மாலை, இரவு பகுதிகளில் மிக கனமழை பெய்யும். நாளை மாலைக்கு பிறகுதான் புயலானது கரையை கடக்கத் தொடங்கும். நகர்ந்து வருவதில் காலதாமதம் உள்ளதால் மாலை மேல் இரவு நேரத்தில்தான் கரையை கடக்கத் தொடங்கும். இந்த புயல் கரையை கடப்பதில் ஒரு நல்ல தகவல் உள்ளது. கழிமுகப் பகுதிகளில் கரையை கடக்காமல் சென்னை அருகே கரையை கடப்பதுதான். புயல் சென்னை கடல் மட்டத்திற்கு மேல் இருக்கிறது. எனவே பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும். இரவு நேரத்தில் கரையை கடப்பதால் மக்களுக்கான பாதிப்பு குறைவாகவே இருக்கும். புயல் கரையை கடக்கும் இடங்களில் விடாமல் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 20 முதல் 30 செ.மீ. மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதற்கு மேலும் மழை பெய்யலாம். இது மழை நிறைந்த புயலாகவும் காற்று நிறைந்த புயலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்தா புயலின் போது சென்னையில் 120 கி.மீ. தூரத்தில் காற்று வீசியது. கஜா புயலின் போது 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. தானே புயல் 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் வீசியது. இந்த நிவர் புயலானது 100 முதல் 110 கி.மீ. வரை வீசும். நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காற்று வீசும். எனவே 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதை கருதி தயார் நிலையில் இருக்க வேண்டும். கடல் பகுதிக்கு ஒரு புயல் கரையை கடந்தால் அந்த புயலின் வடபகுதியானது இடதுபக்கமாக (எதிர் கடிகாரச்சுற்று) சுற்றுவதால் கடல் சீற்றம் அதிகமாகத்தான் இருக்கும். கன்னியாகுமரி, இராமநாதபுரம் அருகே சென்றால் கடல் அமைதியாக இருக்கும். அதே கடலூர், புதுவை, சென்னை கடற்கரைகளுக்குச் சென்றால் கடல் சீற்றத்துடனே காணப்படும். புயல் எங்கேயோ கரையை கடக்கிறது என எண்ணிக் கொண்டு வடபகுதியில் இருந்தாலும் மக்கள் கடல் பகுதிக்கு செல்லக் கூடாது. சென்னையில் நாளை கனமழை பெய்யும். இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னை, புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் புயல் கரையை கடக்கும் போது வெளியே வர வேண்டாம். புயல் கரையை கடப்பது 2 பகுதிகள் உள்ளன. முதலில் வடமேற்கு திசையிலிருந்து காற்று வரும், உள்ளே போன பிறகு தெற்கு, தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும். மையப்பகுதிக்கு செல்லும் போது அமைதி இருக்கும் என்றார் பிரதீப் ஜான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



