பிக்பாஸ் போட்டியாளர்களால் நைனா என்று அழைக்கப்பட்ட மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைக்கப்பட்டார். 10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பருவம் மூன்;றில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் இந்த மோகன் வைத்தியா. பிக்பாஸ் போட்டியாளர்களால் நைனா என்று அழைக்கப்பட்ட மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திரைப்பேரறிமுகங்கள் வரிசை கட்டி பாஜகவில் இணைக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வத்தை முதலாவதாக வளைத்தார். அடுத்தடுத்து அரசியல் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவ வைக்கும் நடவடிக்கைகளை முருகன் மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகளில் பெரிய வெற்றியாளர்களை முருகனால் வீழ்த்தமுடியவில்லை. பாஜகவில் குஷ்பு இணைக்கப்பட்ட நேரத்தில் திரை பேரறிமுகங்கள் பலரும் வரிசையாக பாஜகவில் இணைவதும் அவர்களுக்கு கட்சியில் ஏதோ ஒரு பொறுப்பு வழங்கப்படுவதும் தொடருகிறது. இதனிடையே பிக்பாஸ்3 போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா பாஜகவில் இணைவார் நேற்று தகவல் வெளியானது. ஆனால் தாம் இணையும்போது அறிவிக்கிறேன் என வனிதா கூறிவிட்டாதாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்களால் நைனா என அழைக்கப்பட்டவர் மோகன் வைத்யா. சென்னையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மோகன் வைத்யா. தமிழக அரசியலில் நோட்டாவை வீழ்த்தும் முயற்சியில் எல்.முருகன் களம் இறங்கியிருப்பதை உணரமுடிகின்றது. அதற்காக ஒவ்வொரு துறையிலும் நோட்டாவை (மக்கள் புறக்கணிப்பு) வெல்லும் தளத்தில் இருந்து வரும் ஆட்களாக பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து பாஜகவில் இணைத்து வரும் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



