Show all

நாங்க ரொம்ப பிசி! சன்நெக்ஸ்ட் எண்ணிமத்தளத்திலும் சன்தொலைக்காட்சியிலும் வெளியாகிறது

கொரோனா ஊரடங்கு தளர்வில் முதலாவதாக எடுக்கப்பட்டு முதலாவதாக தீபாவளி அன்று எண்ணிமத் திரையில் வெளியீடாக இருக்கிற படம் நாங்க ரொம்ப பிசி.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு தளர்வில் முதலாவதாக எடுக்கப்பட்டு முதலாவதாக தீபாவளி அன்று எண்ணிமத் திரையில் வெளியீடாக இருக்கிற படம் நாங்க ரொம்ப பிசி. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பத்ரி இயக்கி வருகிறார். பிரசன்னா, சாம், சுருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென்  உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் எண்ணிமத் தளத்திலும் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தகவல் வெளியானது. ஆனால், சன் தொலைக்காட்சியினர் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது.

இன்று ஆயுதபுசையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள், படக்குழுவினரின் பேட்டி என சன் தொலைக்காட்சி இன்று ஒளிபரப்பியது. இதற்கான காணொளி விளம்பரத்தை சன் தொலைக்காட்சி தங்களுடைய கீச்சுப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

அந்தக் கீச்சுவில் திரையரங்கத்திற்கு வர்றதுக்கு முன்னாடியே உங்க சன் தொலைக்காட்சியில் தீபாவளிக்கு வெளியாகப் போகிற புத்தம் புதிய திரைப்படமான ‘நாங்க ரொம்ப பிஸி’ படத்தோட சிறப்பு முன்னோட்டம். காலை 11:30 மணிக்கு என்று தெரிவித்திருந்தது சன் தொலைக்காட்சி.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாயா பஜார் 2016 திரைப்படத்தின் தமிழ் மறுபதிப்பு இந்தப்படம் என்று சொல்லப்படுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.