தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலம் போல பொய்மைகள், பிழைகள் நிறைந்து உருவாக்கப் பட்டுள்ள, புதிய பாடத் திட்டம் முற்றிலுமாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்த் தொடர் ஆண்டு 3096ல், அதாவது இரண்டாயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மாமன்னன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை, தமிழ் தொன்மைக்கு சான்றாய் நிற்கும் போது, மேலும் தொடர் ஆண்டுக் கணக்கை 5121 ஆண்டுகளுக்கு கொண்டுள்ள தமிழ் மொழி, கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி என்றும், தமிழ் ஒலியன்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்தை அமைத்துக் கொண்ட சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது என்றும் பொய்யான தகவல் திணிக்கப் பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,225.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



