23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளே இல்ல... தலைமை அமைச்சர் மோடி பங்கேற்ற கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில், இருக்கைகள் காலியாக இருந்தன. இது தொடர்பாக வெளியான காணொளிகள் சமூக வலைதளத்தில் தீயாகி வருகிறது. சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் நேற்று நடந்த கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக சார்பாக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல், நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாமக சார்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு விழா தவிர்த்து அதிமுக, பாஜக கூட்டணியின் முதல் கருத்துப் பரப்புதல் கூட்டம் இதுவாகும். இதில் அதிமுக, தேமுதிக இடையேயான கூட்டணி தற்போது வரை உறுதி படுத்தப்படவில்லை. இந்நிலையில் இக்கூட்டத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்த காணொளிகள் வெளியாகி தீயாகி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.