Show all

இடைத்தேர்தலில் நாம்தமிழர்கட்சி! ஒற்றை வாக்கு கூடுதலாக கிடைத்தாலும் வெற்றிதான்: சங்ககால தமிழகத்தை மீட்கும் முழக்கத்துடன்.

இடைத்தேர்தலில் போட்டியிட்டு அசிங்கப்பட வேண்டாமே என்ற எண்ணத்தில், மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சியும் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளன. சங்ககால தமிழகத்தை மீட்டே தீருவது என முழக்கமிட்டு வரும் நாம்தமிழர் கட்சி ஒற்றை வாக்கு கூடுதலாக கிடைத்தாலும் வெற்றிதான் என்பதாக இடைத்தேர்தலில் களமிறங்குகிறது என்கிறார் சீமான்.

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என, அமமுக, பொதுச்செயலர், தினகரனை தொடர்ந்து, நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியும் முடிவெடுத்துள்ளது. 

மேலும், நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும், தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இந்த எண்ணத்துடன், ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் என்ற, இந்த ஊழல் நாடகத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது. என்றும் கமல் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், இந்த இரு தொகுதிகளிலும், இன்று வேட்புமனு பதிகை தொடங்குகிறது. இடைத்தேர்தலில், திமுக, - காங்கிரஸ் கட்சிகளுடன், அதிமுக நேரடியாக மோதுகிறது.

கடந்த, சட்டமன்றத் தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, வசந்தகுமார் வெற்றி பெற்றார். இவர், இந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று, பாராளுமன்ற உறுப்பினர் ஆனதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். விக்கிரவாண்டி தொகுதி, திமுக  சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.

எனவே, இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (21.10.2019) நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

'எங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்காததால், இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை” என, அமமுக பொதுச்செயலர், தினகரன் அறிவித்தார். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், என்றைக்காவது ஒருநாள் சங்ககாலத் தமிழகம் போன்ற செழுமையானதொரு ஆட்சியை தமிழத்தில் முன்னெடுப்பது என்கிற இலக்கை முன் வைத்து தனித்து ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் நாம்தமிழர் கட்சி இந்த இடைத் தேர்தலையும் மக்களிடம் இருந்து முன்னேற்ற அறிக்கை பெறுவதற்கான வாய்ப்பாக பயன் படுத்திக் கொள்வது என்ற முடிவில் களம் காண்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,284.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.