தன்னுடைய அப்பாவுக்கு நினைவேந்தல் நிகழ்த்த சமாதிக்கு சென்றபோது, அரசியல் பிரமுகர் கருணாகரனை வெட்டி- கை, கால் என தனித்தனியாக கூறு போட்டுள்ள கொடூரம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. 07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர் கருணாகரன். இவர் காலடி பதிக்காத கட்சியே இல்லையாம். தொடக்கத்தில் பாஜக, பிறகு, அதிமுக, அதன்பின்னர் திமுக. அனைத்துக் கட்சிகளிலும் உலா வந்திருக்கிறார். கருணாகரன், குலையன் கரிசலில் தன்னுடைய அப்பாவின் சமாதிக்கு நினைவேந்தல் நிகழ்த்த சென்றுள்ளார். அப்போது ஒரு மர்மகும்பல் கருணாகரனை மடக்கி கொண்டது. அவர்களிடம் இருந்து தப்பித்து கருணாகரன் காரை விட்டு இறங்கி ஓட முயன்றும், விரட்டி விரட்டி கடைசியில் சுடலைமாட சாமிக்கு ஆட்டை பலி கொடுக்கும் இடத்துக்கே வந்துவிட்டனர். கும்பல் வளைத்து கொண்டதால் தொடர்ந்து கருணாகரனால் ஓட முடியவில்லை. அதனால் அதே இடத்தில், கருணாகரனின் கழுத்து, தலை, மார்பு என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது கும்பல். தகவலறிந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொழில், கோயில் திருவிழா எடுத்தது மற்றும் அரசியல் ரீதியான போட்டி கருணாகரனுக்கு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்பவுமே இடுப்பில் ஒரு துப்பாக்கி வைத்திருப்பாராம். நேற்றைக்கு என்று அந்த துப்பாக்கியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டார் போல. கருணாகரனை கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,222.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



