ஒட்டு மொத்த இந்தியாவையும் மீண்டும், பிரித்தானிய இந்தியாவிற்கு முன்பு ஒட்டு மொத்த இந்தியாவும், பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது போல மாற்றி மகிழ்ந்திட: சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. சாதிய இன ஏற்றதாழ்வு என்பது: பார்ப்பனிய இனம் பிறப்படிப்படையிலேயே எல்லா இனங்களையும் விட உயர்ந்தது. சாதிகள் அடிப்படையில், உடலுழைப்புத் தளத்தில் இருக்கும் சாதிகள் மிகத்தாழ்ந்தவை. நிருவாகத்தளத்தில் இருப்பவை உயர்ந்தவை; ஆனால் பார்ப்பனிய இனத்தை விட எல்லா சாதிகளும் தாழ்ந்தவை. இதனால் பார்ப்பனியர்கள் பேசுகிற சம்ஸ்கிருதம் தேவபாஷை; தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் அனைத்தும் நீச பாஷை. இந்தப் பார்ப்பனிய ஏற்றதாழ்வுகளால் தாம் அடிமைத் தனத்தில் இருக்கிறோம் என்று பிரித்தானிய இந்தியாவில் புரிந்து கொண்ட பலர்- தங்களை ஆண்டு கொண்டிருக்கிற இன மொழியான ஆங்கிலத்தைக் கற்று, தங்களை உயர்ந்தவர்கள் ஆக்கிக் கொள்ள முயன்றனர். இன்றைக்கும் கூட ஆங்கில வழிப் பள்ளிகள் அதற்குதாம் பாமர மக்களால் நாடப் படுகின்றன. அதை அறுவடை செய்து பணம் கொழிக்கவே ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப் படுகின்றன. ஆக தாய்மொழியல்லாத எந்த மொழியும், தம் இன மக்களை தாழ்த்தி, தம்மை மட்டும் உயர்த்திக் காட்டிக் கொள்ள பயன்படுகிற வகையால், அடுத்த மொழியினரின் ஆதிக்க விரும்பிகள் அங்கிகரிக்க, அந்த ஆதிக்க மொழிகள் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகின்றன. இன்றைக்கும் இந்தியாவில், தாய்மொழிகளுக்கு எதிராக ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகியன ஆதிக்க மொழிகளாக இருந்து திணிக்கவும், ஆதிக்க விரும்பிகளால் விரும்பி ஏற்கவுமாக கோலோச்சி வருகின்றன. இந்த வகையாக சமஸ்கிருத மொழியை அதிகமானோர் கற்கும் வகையில், அதை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ் மற்றும் துணை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. பள்ளிக் கல்வியில், மும்மொழி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என, அண்மையில் வெளியிடப்பட்ட, பாஜக நடுவண் அரசின், வரைவு கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ‘சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க வேண்டும்’ என, ராஷ்ட்ரீய ஸ்வம் சேவக் அமைப்பின் துணை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, பாரதிய சிக் ஷன் மண்டல், சமீபத்தில், வெளியிட்ட அறிக்கை: மும்மொழி கொள்கையால், சமஸ்கிருதம் அதிகம் பாதிக்கப்படுகிறது. பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கட்டாயமாக உள்ளது. அத்துடன் ஹிந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக பெரும்பாலானோர், ஹிந்தியை தேர்வு செய்கின்றனர். வெகு சிலரே, சமஸ்கிருதத்தை தேர்வு செய்கின்றனர். அதனால், மும்மொழி திட்டத்துடன், சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றொரு துணை அமைப்பான, சமஸ்கிருத மொழியை பரப்பும், சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவர், தினேஷ் காமத் கூறியதாவது: மும்மொழி கல்வி திட்டத்தில், ஹிந்தி மற்றும் தாய்மொழியுடன், மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தற்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 1 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. கேரளாவில், 1ம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரப்படுகிறது. அதே நேரத்தில் உத்தரகண்டில், 3ம் வகுப்பில் இருந்து கற்றுத் தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது; 11மற்றும் 12 வகுப்பில், இரண்டாவது மாற்று மொழியாக கற்றுத் தரப்படுகிறது. பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிலும், சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு, 120 பல்கலைகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. இதைத் தவிர, நடுவண் அரசு நடத்தும் மூன்று பல்கலைகள் உட்பட, 15 சமஸ்கிருத பல்கலைகளும் உள்ளன. இதற்கிடையே, சமஸ்கிருதத்தை பேசும் மொழியாக உள்ள கிராமங்களை உருவாக்கவும், நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கிராமங்களை தேர்வு செய்யும் முயற்சி நடந்து வருகிறது. நடுவண் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த ரமேஷ் போக்ரியால், உத்தரகண்ட் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார். பந்தோலா கிராமத்தில் உள்ள மக்கள், ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்திலேயே பேசுகின்றனர். ஆனாலும்; கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரப்படி, சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 மட்டுமே இந்தியாவில் உள்ளனர். உண்மையில் சம்ஸ் கிருதத்தை தூக்கிப் பிடிக்கிற யாருக்கும் சம்ஸ்கிருதம் எழுத படிக்கத் தெரியுமேயொழிய பேசத் தெரியாது; உண்மையில் சம்ஸ்கிருதம் பேசுவதற்கான மொழியே இல்லை என்பதான விவாதமும் முன் வைக்கப் பட்;டு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,222.
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரித்தானிய இந்தியாவிற்கு முன்பு ஒட்டு மொத்த இந்தியாவும், பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது என்பது வரலாற்று உண்மைதான். பிரித்தானியர் ஆட்சியில்தான், ஒட்டு மொத்த இந்தியாவும் பார்ப்பனியர்களின் சாதிய இன ஏற்றதாழ்வுகளுக்கு ஆட்பட்டிருக்கிறது என்பதை இந்திய மக்களுக்கே புரிந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



