Show all

நீட் அவலம்: மகளுக்கு மருத்துவ இடம் கிடைக்காதோ எனும் அச்சத்தில் வேலூரில் தாய் தற்கொலை

12ம் வகுப்பில் 1124 மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளுக்கு மருத்துவ கல்வி பெறுவதற்கான இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூர் அருகே பாகாயம் அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருடைய மனைவி நித்யலட்சுமி கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் அபிதாமதி 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ சேர்க்கைக்காக காத்திருக்கிறார்.

நித்யலட்சுமிக்கு தனது மகள் அபிதாமதியை மருத்துவராக்க வேண்டும் என்பது நெடுங்கால கனவாக இருந்தது. இந்நிலையில், அபிதாமதி 12ம் வகுப்பு தேர்வில் 1124 மதிப்பெண்ணும், நீட் பொது நுழைவுத்தேர்வில் 224 மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். மதிப்பெண் குறைவாக எடுத்திருந்ததால், மருத்துவராக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரியில் அபிதாமதியை சேர்க்க அவரது குடும்பத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் வாக்குவாதமாக மாறியதில் நித்யலட்சுமி மனமுடைந்ததாக கூறப்படுகிறது. மனக்கசப்பு காரணமாக, ஞாயிறு அன்று வீட்டில் இருந்த தாய் நித்ய லட்சுமி மகள் மருத்துவராகவே முடியாதே! என்று தனது ஆசை கனவாக போய் விட்டதாக நினைத்து வருந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, பாகாயம் காவல்துறையினர் வழக்குபதிவு நடத்திய விசாரணையில் மகளை மருத்துவராக்க முடியாமல் போனதற்கான நீட்; தேர்வே காரணம் என்று தெரியவந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.