Show all

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் முதல் முறையாக நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு

தமிழகத்தின் நீண்ட நெடிய போரட்டத்தை கருத்தில் கொள்ளாமல் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான நடுவண் அரசின் முடிவை அதன் வானாளவிய அதிகாரமான உச்ச அறங்கூற்று மன்றத்தின் மூலம் ஆணையாக்கியது.

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மருத்துவக் கலந்தாய்வை முதல் முறையாக நடுவண் கல்வி வாரியம் கைப்பற்றியது.

அந்த அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை தமிழக நலவாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.

இதில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் 27,488 பேர். கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து இந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய 5,636 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

நடுவண் அரசு கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படித்த 3,418 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நீட் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 36542 மாணவர்கள் கொண்ட இந்தத் தரவரிசைப் பட்டியலை நடுவண் அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.

முதற்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கு நாளை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்தத் தகவல் தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முதல் 20 இடங்களில் நடுவண் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 5 இடங்களைப் பிடித்தனர். 6 முதல் 20 இடங்களில் மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் பிடித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.