Show all

கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு குறித்த வழக்கு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த கிழமை இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதில் பிரச்னையில்லை என்றால் கர்நாடகாவில் புதிய அணை கட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக அரசு வழக்குரைஞர் கூறியதாகத் தகவல்கள் வெளியானது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த தகவலை முதல்வர் பழனிசாமியும் மறுத்தார்.

இந்த நிலையில், இன்று இதே வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அணியமான வழக்குரைஞர், கர்நாடகாவின் எல்லைக்குள் எந்தப் பகுதியிலும் அணை கட்டக் கூடாது. காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். புதிய அணை கட்டுவது தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்று வாதிட்டார்.

வழக்கு விசாரணையை நேரில் ஆய்வு செய்ய, தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் உச்ச அறங்கூற்றுமன்றம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடுதாண்டும் காவிரி பகுதியில் அணை கட்ட தமிழக அரசு ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.