தமிழகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட இராகுல், நோட்டாவை எதிர்கொள்ள முடியாத பாஜக போல் இல்லாமல், தமிழக மக்களிடம் கணிசமான வாக்குகளை பெற தகுதி அடைந்து விட்டார் என்று நம்பலாம்.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவனை உருவாக்க தமிழக மக்கள் தொடர்ந்து முயல்கிறார்கள். தமிழகத்தின் தலைவன் ஆக வேண்டும் என்று முயல்கிறவர்கள், தமிழர்தம் நேர்காணலில் சரியாகத் தோன்ற முடியாமல் தகுதி இழந்து விடுகிறார்கள்.
பெரியார் வந்தார், அண்ணா வந்தார், காமராசர் வந்தார், கருணாநிதி வந்தார், எம்ஜியார் வந்தார், செயலலிதா வந்தார், சிவாஜி வந்தார், பாவாணர் வந்தார், மறைமலை அடிகள் வந்தார், பெருஞ்சித்திரனார் வந்தார், பல பொதுவுடைமை கருத்தாளர்கள் வந்தனர், இராமதாஸ் வந்தார், விஜயகாந்த் வந்தார், பாக்கியராஜ் வந்தார், பாரதிராஜா வந்தார், இளையராஜா வந்தார், ரஜினிகாந்த் வந்தார், கமல் வந்தார், குமரிஅனந்தன் வந்தார், நெடுமாறன் வந்தார், தமிழிசை வந்தார், எச்இராஜா வந்தார், சீமான் வந்தார், வேல்முருகன் வந்தார், தினகரன் வந்தார் யாரையும் தமிழக மக்கள் தூக்கி எறியவில்லை.
தமிழினம் உலகின் மூத்த இனம். தமிழர்கள்:
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். என்றும் தெரிந்தவர்கள்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். என்றும் புரிந்தவர்கள்.
தமிழனை வழிநடத்த எந்த ஒரு இனமும் கிடையாது. தமிழனை வழிநடத்த தமிழன்றி இன்னொரு மொழியும் கிடையாது. தமிழனை வழிநடத்த எந்த ஒரு மதமும் கிடையாது. தமிழனை வழிநடத்த எந்த ஒரு தத்துவமும் இருக்க முடியாது. தமிழனை வழிநடத்த எந்த ஒரு ஏந்த தனிமனிதனும் கிடையாது.
தமிழர்கள் எந்த ஒரு மனிதரையும் தன்னை வழிப்படுத்தியதாக தூக்கிப் பிடிக்கிறவர்கள் இல்லை. தன்னுடைய இயலை (தமிழியலை) புரிந்து கொண்டவர்களை- தூக்கிப் பிடிக்கிறவர்களை- கொண்டாடுகிறவர்கள். தமிழ் என்றால் அதிகாரம். தமிழன் என்றால் அதிகாரம். தமிழியல் என்றால் அதிகாரம். தமிழினத்தை எவனும் அதிகாரம் செய்ய முடியாது.
மேலே சொன்ன யார் ஒருவரையும் தமிழக மக்கள் அவர்களின் கருத்துக்காக கொண்டாடியதில்லை. தமிழியலை புரிந்து கொண்டு ஒழுகிய அளவிற்கு கொண்டாடி இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்களால் வாழ்மானம் பெற்றிருக்கிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,121.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.