Show all

திமுகவின் கெட்டியான விளம்பரம்! அதிமுகவின் உப்பு சப்பில்லாத விளம்பரம்

ஒரே பக்கத்தில் வெளியாகியிருக்கிற இரண்டு விளம்பரங்கள் தேர்தலில் வெற்றியை எந்தக் கட்சி மீட்டெடுக்கும் என்பதற்கு- யாருக்கு நல்ல களம் இருக்கிறது என்பதை இந்த விளம்பரம் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 

'ஆதிக்கவாதிகளும் வேண்டாம் அடிமைகளும் வேண்டாம் தமிழ் மானம் காப்போம்.' இது திமுகவின் சத்தான விளம்பரம்.

திமுக சிறப்பாக விளம்பரத்தை கையாண்டிருக்கிறது என்பதற்கான செய்தியை விட, திமுகவிற்கு வலிமையான விளம்பரத்தை வடிவமைப்பதற்கு ஆண்டுகொண்டிருக்கும் பாஜகவும், அடிமையாட்சி புரிந்து கொண்டிருக்கும் அதிமுகவும் சிறப்பான வாய்ப்பை வழங்கியிருக்கின்றன என்பதே உண்மை.

நீட், ஸ்டெர்லைட், பணமதிப்பழிப்பு, சரக்கு-சேவைவரி, மீத்தேன் என்ற நடுவண் அரசின் எந்த அதிகாரத்திலிருந்தும்,  அடிமை அதிமுக அரசு தமிழர்களுக்கு மீட்பு தேடித்தர வில்லை என்பதுதாம் திமுகவிற்கு கிடைத்திருக்கிற அந்த அருமையான வாய்ப்பு.

'கொத்து கொத்தாய் நாங்கள் வீழ்ந்ததும் போதும், குடும்பம் குடும்பமாக நீங்கள் வாழ்ந்ததும் போதும்' இது அதிமுக விளம்பரம் உப்பு சப்பு இல்லாத வேடிக்கை விளம்பரம்.

கொத்து கொத்தாக வீழ்ந்தது யார்? குடும்பம் குடும்பமாக வாழ்ந்தது யார்? என்ன சொல்ல வருகிறது அதிமுக புரியவேயில்லை. 

ஆம்! ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொத்து கொத்தாக அப்பாவி தமிழ் மக்கள் வீழ்ந்தார்கள். அது திமுகவிற்குதானே விளம்பரம் அதை எப்படி நீங்கள் கொண்டாட முடியும். 

சரி புரிந்து கொண்டதாக விவாதிப்போம். திமுக குடும்பம் குடும்பமாக வாழ்ந்ததா? சரி கொத்து கொத்தாக வீழ்ந்தது யார்? எடப்பாடியும், பன்னீருமா? என்னப்பா விளம்பரம். ஏதற்கு உனக்கு ஓட்டு போடனும் தெளிவாகச் சொல்லு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,121.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.