20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாராளுமன்றத்தில் மோடி அரசின் கடைசி வரவு-செலவு நேற்று அருண்ஜெட்லியால் பதிகை செய்யப்பட்டது. இந்த வரவு-செலவு பாஜகவின் ஆளுமை மீதான மக்கள் விருப்பத்திற்கே கடைசியா? என்கிற கோணத்தில் இணைத்தில் மாலைமலர் நடத்திய தேர்தல் முடிவில் ஆம் கடைசிதான் என்;;றே மக்கள் தெரிவித்திருக்கின்றனர். சாமானியர்களுக்கு ஏமாற்றம் என்று 82 விழுக்காட்டினரும், வேளாண் பெருமக்களுக்கு நன்மை என்று 4 விழுக்காட்டினரும், வளர்ச்சிக்கான வரவு-செலவு என்று 6 விழுக்காட்டினரும், கருத்து தெரிவிக்க மறுத்து 8 விழுக்காட்டினரும், மாலைமலரின் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் கூட நோட்டாவிற்கு அடுத்த இடம் தானா பாஜகவற்கு! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,686
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



