20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பையைச் சேர்ந்த வாலிபர் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 முன்பதிவு செய்து, துணி துவைப்பதற்கான சலவைக் கட்டி அனுப்பப் பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையை சேர்ந்த தப்ரெஜ் மெகபூப் நகரேலி எவ்வளவு நாள் கனவுடன் ஐபோன் முன்பதிவு செய்தாரோ, அவருக்கு மோசமான அனுபவத்தை பிளிப்கார்ட் ஏற்படுத்தி உள்ளது. தனக்கு அதிகம் பிடித்த ஐபோன் 8 மாடலை வாங்க ரூ.55,000 ஒரு தவணையில் செலுத்தி பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்திருந்தார். பிளிப்கார்ட் சார்பில் அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட பார்சலில் ஐபோன் 8 பெட்டிக்கு மாற்றாக துணி துவைக்கும் சலவைக் கட்டி வைக்கப்பட்டிருந்தது. ரூ.55,000-ஐ ஒரே தவணையில் செலுத்தியவருக்கு பெட்டியில் சோப்பு கட்டியை பார்த்தும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே மும்பையின் பைகுலா காவல் நிலையத்தில் பிளிப்கார்ட் மீது ஏமாற்றப்பட்டதாக தப்ரெஜ் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து பிளிப்கார்ட் செய்தி தொடர்பாளர் சார்பில் பதில் அளித்துள்ளார். அதில் இவ்விகாரம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக பலமுறை அரங்கேறியுள்ளது. எனினும் இதுபோன்ற விவகாரங்களின் உண்மை நிலை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. என்றும் தெரிவித்தார். நடவடிக்கையின் இடைப்பட்ட காலங்களில் பாதிக்கப் பட்டவரின் மனஉளைச்சல் சொல்லி மாளாது என்பதை இது போன்ற சிக்கல் உருவாவதற்கான நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,686
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



