20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் படர்கிறது தாமரைக் கொடி. தமிழர் விரோதப் போக்கால் தனித்து நின்றால் தமிழகத்தில் நோட்டாவிடம் தோற்கும் கட்சி. 20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: 20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் படர்கிறது தாமரைக் கொடி. தமிழர் விரோதப் போக்கால் தனித்து நின்றால் தமிழகத்தில் நோட்டாவிடம் தோற்கும் கட்சி. அப்போது கொம்பு கொடுத்து படரவிட்டது திமுக. தற்போது கொம்பு கொடுத்து தாமரைக் கொடியை தாங்கிப் பிடித்துள்ளது அதிமுக. அன்றைக்கு இந்த பாஜக திமுக கூட்டணியில் இடம் பெற்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று நோட்டாவிடம் முட்டி மோதிக் கொண்டிருந்தது. இந்தத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக 20தொகுதிகளை வலிந்து பிடுங்கியது. அதில், நாகர்கோவில் தொகுதியில், எம்.ஆர்.காந்தி; கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் அதிமுக ஆதரவில் வெற்றி பெற்றுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.