Show all

திருமங்கலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்! வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபாடு குறித்து குற்றச்சாட்டு

திருநெல்வேலியிலும், விராலி மலையிலும் மற்றும் திருமங்கலத்திலும் வாக்கு இயந்திரங்களில் முறைகேடா? குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது திமுக 

19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு, வேறு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவதாக திருமங்கலதத்திலும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் மணிமாறனைவிட அதிமுக அமைச்சராக இருந்த உதயகுமார் இந்தத் தொகுதியில் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியில் வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு வேறு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கே பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் இயந்திர வாக்கு எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு வேறு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விராலிமலைத் தொகுதியில் அதிமுகவின் விஜயபாஸ்கர் முன்னனியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.