‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ எனும் தலைப்பில் தமிழக முதல்வராகவுள்ள ஸ்டாலின் கீச்சுவில் இந்திய அளவில் முதன்மைத் தலைப்பாகியுள்ளார். 20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து வெளியாகி திமுகவிற்கு வெற்றியை உறுதி படுத்தியுள்ளன. திமுக கூட்டணி 159 இடங்களையும், கடந்த தேர்தலில் 89 இடங்களைப் பெற்று எதிர்கட்சியாக இருந்து வந்த திமுக தனித்து 125 இடங்களில் வாகை சூடியுள்ளது. இந்த வெற்றிக்காக ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பேரறிமுகங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கீச்சுவில் இந்திய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைப்பாகி வருகின்றார். முகஸ்டாலின் எனும் நான் என்ற தலைப்பு உருவாக்கப்பட்டு, அந்தத் தலைப்பே இந்திய அளவில் முதன்மை ஆக்கப்பட்டுள்ளது. இந்;தத் தலைப்பின் கீழ் ஏராளமானோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாமும் தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்கவுள்ள திமுக தலைவர் முக. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறோம். அதிமுக, ஒன்றிய பாஜக அரசிடம் இழந்த தமிழக உரிமைகளை மீட்டெடுக்க, திமுகவிற்கு முழுத்தகுதியை வழங்கியிருக்கின்றனர் தமிழக மக்கள். திமுக உறுதியுடன் களமிறங்கி, தமிழக உரிமைகளை மீட்டெடுக்கவும், இந்தியாவில் மாநில ஆட்சிக்கு முனையும் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றிய ஆட்சியில் அடாவடி அதிகாரத்தை முன்னெடுத்துவரும் பாஜகவை விரட்டியடிக்கவும் வாழ்த்துகிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.