கர்நாடக மாநிலத்தில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழையால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 11 ஆயிரத்து 885 கன அடியில் இருந்து 33 ஆயிரத்து 3569 கனஅடியாக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.58 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 87.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 41.39 டிஎம்சியை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிக அளவில் இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



