Show all

விரைவில் சினிமாவாக உருவெடுக்கும் மிதாலி ராஜின் வாழ்க்கை

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை விரைவில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. மிதாலி ராஜின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக வயாகாம் 18 மோசன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி கூறிய மிதாலி ராஜ், வியாகம்18 மோசன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் நிறைய பேருக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும். மேலும்  இளஞ்சிறுமிகள் விளையாட்டை தங்களது தொழிலாக எடுத்து கொள்ள ஏதுவாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் மற்றும் 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீராங்கனையும் ஆவார். மேலும் 2005 மற்றும் 2017 வருடங்களில் நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றவர். மேலும் இவர் இந்திய அரசின் அர்ஜூனா மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.