04,வைகாசி (மே17)க்குப் பிறகு ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கொன்றொழிப்பில் இலங்கையில் அமைதி திரும்பியதாக அன்றொரு ஆண்டில் பேசப்பட்டது. அந்த நாள் இந்த ஆண்டில் நமக்கு ஊரடங்கு முடிப்பு நாளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கட்டண உயர்வுகளும் வரிகளும் வரிசை கட்டும் என்கிற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியிருக்கிறது. 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: அன்றொரு ஆண்டில் பேசப்பட்டது: 04,வைகாசி (மே17)க்குப் பிறகு ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கொன்றொழிப்பில் இலங்கையில் அமைதி திரும்பியதாக. இந்த ஆண்டில் நமக்கு ஊரடங்கு முடிப்பு நாளாக அந்த நாள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கட்டண உயர்வுகளும் வரிகளும் வரிசை கட்டும் என்கிற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு மண்டலமாக (48நாட்கள்) கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக இதுவரை 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். தொழிலாளர்களுக்கான சம்பளம் 450 கோடி நிதி தேவைபடுகிறதாம். வருவாய் பற்றாக்குறையால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை ஓரளவுக்கு ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மதுபானங்கள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு அகவை உயர்வு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந் நிலையில் ஊரடங்கின் போது, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய 04,வைகாசி (மே17)க்குப் பிறகு ஊரடங்கு முடிந்தவுடன் பேருந்து கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



