கடும் முயற்சியிலும், ஊரார் ஒத்துழைப்பிலும், உரிய பயிற்சி பெற்றால் மட்டுமே ஒரு மாணவனால் இப்படி சாதிக்க முடியுமா? அப்படியானால் நீட் தேர்வு- தனியார் பயிற்சிக்கே முன்னெடுக்கப் படுவது என்றால்;, 12 ஆண்டுகள் மெனக்கெட்டு படித்த கல்வி எதற்கு? அதுவும் ஈடுபாடோடு படித்து 600க்கு, 548 மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டிய தேவை எதற்கு? என்பதே தமிழகப் பெற்றோர்களுக்கு நீட் குறித்து இருக்கும் கேள்விகளாகும். 01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில், 720க்கு, 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில், 1,823ம் இடம் பிடித்துள்ளார். இந்திய அளவில், அரசு பள்ளி மாணவர்களில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில், ஜீவித் குமார் முன்னிலை பெற்றுள்ளார். இவரது தந்தை நாராயணசாமி, ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவரது தாய் மகேஸ்வரி, நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்கிறார். கடந்த கல்வி ஆண்டில், பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஜீவித் குமார், பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், 600க்கு, 548 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் அப்போது, நீட் தேர்வு எழுதி, 720க்கு, 190 மதிப்பெண் மட்டுமே அவரால் பெறமுடிந்தது. குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வகையாக அரசு மருத்துவ கல்லூரியில் சேர, இன்னும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதால், மீண்டும், நீட் தேர்வை எழுத முடிவு செய்தார். அவரது நம்பிக்கையை பாராட்டி, அரசு பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி, தனியார் பயிற்சி மையத்தில், ஓராண்டு சிறப்பு பயிற்சி அளித்தனர். இதையடுத்து, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். அதில், 664 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுவரை நடந்த, நீட் தேர்வுகளில், தமிழக அரசு பள்ளி மாணவர் ஒருவர் எடுத்த, அதிகபட்ச மதிப்பெண் இது. அம்மாணவரை, பள்ளி கல்வி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கடும் முயற்சியிலும், ஊரார் ஒத்துழைப்பிலும், உரிய பயிற்சி பெற்றால் மட்டுமே ஒரு மாணவனால் இப்படி சாதிக்க முடியுமா? அப்படியானால் நீட் தேர்வு- தனியார் பயிற்சிக்கே முன்னெடுக்கப் படுவது என்றால்;, 12 ஆண்டுகள் மெனக்கெட்டு படித்த கல்வி எதற்கு? அதுவும் ஈடுபாடோடு படித்து 600க்கு, 548 மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டிய தேவை எதற்கு? என்பதே தமிழகப் பெற்றோர்களுக்கு நீட் குறித்து இருக்கும் கேள்விகளாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



