ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரிக்கோட்டா விண்வெளிமையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆந்திர மாநிலம் சிறீஅரிக்கோட்டாவில் உள்ள ஏவுகலன் ஏவுதள விண்வெளி மைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரிக்கோட்டா விண்வெளிமையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து விண்வெளிமைய அதிகாரிகள் கூறி இருப்பதாவது: 48 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஏவுகலன் ஏவுதளமான அரிக்கோட்டா விண்வெளிமைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டு இருப்பதால் தற்காலிகமாக மையம் மூடப்படுகிறது. ரோகினி செயற்கை கோள் தோல்வி அடைந்த போதிலும்; பிஎஸ்எல்வி3 செயற்கைகோள் தான் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன் பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை என சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருபது ஆண்டுகள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் உள்நாட்டு செயற்கைகோள் மட்டுமல்லாது வெளிநாட்டு செயற்கை கோள்களும் ஏவப்பட்டு வந்தன. இந்த விண்வெளி மையத்தில் சுமார் 2 ஆயிரம் பேர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். மேலும் 2 ஆயிரம் பேர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களில் பெரும்பாலானோர் (விழிப்புணர்வு இல்லாதவர்களாக நேற்று காங்கிரசிலும், இன்று பாஜகவிலும் இருக்கிற பார்ப்பனிய மேலாதிக்கவாதிகளை நம்பி வீணாய்ப்போய்க் கொண்டிருக்கும்) வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஊரடங்கு காரணமாக அனைவரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். இதன்காரணமாகவும் பணிகள் நிறுத்தப்பட்டன இதனிடையே விண்வெளி மையத்தில் கடந்த கிழமை இஸ்ரோ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதால் தற்காலிகமாக பூட்டுதல் அறிவிக்கப்பட்டது. என அதிகாரி கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



