Show all

ஹிந்தி வெறியில் உளறித் தள்ளிய ராஜ்நாத் சிங்

புதுடெல்லியில் ஹிந்தி திவாஸ் விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

நிருவாகத்திற்கும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஹிந்தியை மட்டுமே பயன்படுத்த இந்திய மக்களுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார்.

உலகம் முழுவதும் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்துவோம் என சபதம் எடுங்கள் என இந்திய மக்களை வலியுறுத்தி உள்ளார்.

சொல்லிலும், செயலிலும், ஆழ்மனதிலும், ஹிந்தியைப் பிரபலப்படுத்துவோம், தூக்கிப் பிடிப்போம். ஹிந்தியை மதிப்பிற்குரிய நிலைக்கு எடுத்துச் செல்வோம், நம்முடைய நாட்டை பெருமையடைய செய்வோம். (நாடு எப்படி பெருமையடையும் சின்னா பின்னமாகவல்லவா மாறும்)

ஹிந்தி நம்முடைய அதிகார மொழியாக உள்ளநிலையில், (இந்திய அரசியல் சட்டப்படி தமிழ் உள்ளிட்ட 22மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகள்; ஹிந்தி அதிகார மொழி என்று பொய்யாக ஹிந்தி வெறி பிடித்த ஆட்சியாளன்கள் 1947லிருந்து கதை விட்டுக் கொண்டிருக்கிறான்கள்) இந்தியாவின் அலுவல் மொழிகளில் அரசு பணிகளுக்கு ஹிந்தியை இந்திய முதன்மை மொழியாக பயன்படுத்துவோம் என்பதை உறுதி செய்வது நம்முடைய அரசியலமைப்பு பொறுப்பாகும். (அயோக்கியத் தனம் எப்படி அரசியல் அமைப்பு பொறுப்பாக முடியும்)

அரசு பணிகளுக்கு மட்டும் ஹிந்தியைப் பயன்படுத்துவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஹிந்தி மொழியைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். ஒரு வலிமையான தேசத்தின் அடையாளமானது, அதனுடைய மொழியான ஹிந்தியை (தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை) எப்படி பரந்து விரிய செய்யப்படுகிறது, செழுமைப் படுத்தப்படுகிறது என்பதானாலே பார்க்கப்படுகிறது,

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஹிந்தியின் பங்களிப்பை கவனித்து, வேற்றுமையில் ஒற்றுமையை நிறைவேற்றுவதில் ஹிந்தி மொழி மட்டுமே அளப்பரிய பங்களிப்பை கொண்டு உள்ளது என கூறி உள்ளார்.

ஹிந்தி இந்திய கலாச்சாரத்தின் பிரதான கூற்றை வெளிப்படுத்துவதில் ஒரு மொழியாக மட்டும் பங்களிக்கவில்லை, இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் மொழியாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார். எளிமையான ஹிந்தி சொற்களை அதிகளவு பயன்படுத்த கோரிக்கை விடுத்து உள்ளார்.

 

அரசு அமைச்சகத்தின் தலைமையகம், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவற்றில் ஹிந்தி மொழியை முதன்மையாக பயன்படுத்த கோரிக்கை விடுக்கின்றேன்.

அதனால் பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இதனை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். கல்வி நிறுவனங்களும் ஹிந்தி மொழியைப் பயன்படுத்துதலை ஊக்குவிக்கவேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளார். ஹிந்தி மொழி பயன்பாடு தொடர்பாக பல சம்பவங்களை பட்டியலிட்ட ராஜ்நாத் சிங்,

நம்முடைய முயற்சியின் மூலம், ஹிந்தியை உலகம் முழுவதும் பரப்புவதில் நாம் வெற்றியடைவோம் என நான் உறுதியாக கூறுகின்றேன் என குறிப்பிட்டு உள்ளார்.

நடுவண் அரசின் உள்துறை அமைச்சர் பொறுப்பில் ஒரு நபர் இந்;தியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியாவின் அதிகார மொழி என்று எந்த மொழியும் இல்லை; தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 22மொழிகளும் சம அதிகாரம் உள்ள அலுவல் மொழிகளே என்பதை மறைத்து தன் தாய்மொழியான ஹிந்தியை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் முகமாக பொய்யுரைகளை பிதற்றி இருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.