17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சட்ட சமூக அமைப்பிடமிருந்து, தம் குழந்தைகளைச் சான்றோராக வென்றெடுப்பது பெற்றோர்களுக்கு பெரும் சாதனை முயற்சியாக இருந்து வருகிறது. கணவனை, வளர்ந்த பிள்ளைகளை, அரசின் சாரயக்கடைகளிலிருந்து காப்பற்ற வேண்டியிருக்கிறது. கல்வி, தொழில், ஊடகம், மருத்துவம், தொலைத்தொடர்பு, வணிகம், வங்கி, அனைத்து உடைமைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் தொலைத்து விட்டு, நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்புக்காக அந்தக் கார்ப்பரேட்டுகள் நிர்பந்திக்கிற கல்விக்காக காசைக் கொட்டிக் கொடுத்து தனியார் பள்ளிகளை நாட வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு என்று கருதி நாம் பெற்றோர் அனுப்பகிற அந்தத் தளங்களிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத போது இப்படித்தான் பெற்றோர்கள் கிளர்ந்தெழுவார்கள். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வித்யா மந்திர் என்ற பள்ளி இயங்கி வருகிறது. அந்த சேர்ப்பிக்கப் பட்ட சிறுமியின் பள்ளிக்குச் செல்லமறுக்கும் பிடிவாதம் பலமாக இருக்கவே, சந்தேகம் அடைந்த தாய், 'குழந்தையை ஏன் போக மாட்டேங்கிறே' என்று விசாரிக்கத் தொடங்கினார். உடனே சிறுமி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார், கணக்கு ஆசிரியர் சதீஷ், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, அவர் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் சிறுமி விவரித்தாள். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுமியிடம் 'நாங்கள் பார்த்துக்கறோம், நீ இப்போ பள்ளிக்கு கிளம்பு' என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று மதியம், உறவினர்களை திரட்டிக் கொண்டு பள்ளி முன் வந்து நின்றனர் பெற்றோர். பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த கணக்கு ஆசிரியர் சதீசை பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே இழுத்து வந்து போட்டனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். சிறுமியின் அம்மாவுக்கு ஆத்திரம் ஏறிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் செருப்பை கழட்டி வெளுக்க தொடங்கினர். இப்படி ஒட்டுமொத்தமாக நம்மை கும்மி எடுப்பார்கள் என்று சதீஷ் கொஞ்சமும் நினைக்கவில்லை. பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்து பள்ளப்பட்டி காவல்துறையினர் அங்கு வந்தனர். பின்னர் விவரம் கேட்டறிந்து கணக்கு ஆசிரியர் சதீசை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



