20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் பாஜக, இம்மியளவும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டும், தன் குழாமில் நேரடியாக இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்துக் கொண்டும், அந்த அதிகாரம், ஆளுமையின் பலத்தால் ஒட்டு மொத்த இந்தியாவை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப் பட்டவன் ஐயோவென்று போவான் என்று, தமிழ்தொடர்ஆண்டு-3070களில் வாழ்ந்த எமது முப்பாட்டன் திருவள்ளுவன் குறள் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறான். தமிழ் மக்கள் கவலை கொள்ள வேண்டாம்! இந்திய மக்கள் கைகளாலேயே அது நிகழும். கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று. -குறள் எண்: 332 குறள் விளக்கம்: மு.வ: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. சாலமன் பாப்பையா: நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



