20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தூத்துக்குடிக்கு தரை வழியாக பயணித்தால் தூரம் 765கிமீ வானில் நேராகப் பறந்து சொன்றால் 660கிமீ இந்த தூரத்தை 4 மணி 47 நிமிடத்தில் பறந்து வந்த புறாவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி வளர்பிறை புறா பந்தயம் அணி சார்பில் கடந்த 33 ஆண்டுகளாக புறாக்களுக்கு, பறக்கும் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து தூத்துக்குடிக்கு சுமார் 765 கிலோ மீட்டர் தூரம் நடந்த போட்டியில் சைமன் என்பவரின் புறாக்கள் முதல் இரண்டு இடத்தை பிடித்தன. முதலிடத்தை பிடித்த புறா 4 மணி நேரம் 47 நிமிடத்திலும், 2வது இடம்பிடித்த புறா 4 மணி நேரம் 50 நிமிடத்திலும் தூத்துக்குடி வந்தன. இந்த தூரத்தைக் கடக்க விமானத்தில் பயணித்தால், 3262ரூபாயும், 8மணி 57 நிமிடங்களும் செலவிட வேண்டும். பேருந்தில் பயணித்தால், 697ரூபாயும் 18மணி 20நிமிடங்களும் செலவிட வேண்டியிருக்கும். ஆவ்! அதனால் தான் நம் தமிழ் மன்னர்கள் அந்தக் காலத்தில் செய்தி அனுப்ப புறாவைப் பயன் படுத்தினார்களா? வீட்டில் ஏச்சு பேச்சுகளை வாங்கிக் கொண்டு, புறா வளர்த்து, தமிழர் அக்கால தூதஞ்சல் துறையின் பெருமை காத்து வரும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



