Show all

கொலையும் தற்கொலையும்! ஒருதலைக்காதல்; கடலூர் குறிஞ்சிப்பாடியில் சோகம்

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்ன கடை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா அகவை 23. இவர் கடந்த ஆண்டு கடலூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். 

அப்பொழுது  விருத்தாசலம் அருகே உள்ள விருத்தகிரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் அகவை 24, என்பவரும் கடலூரில் உள்ள அரசு  கலைக் கல்லூரியில் படித்துள்ளார். இருவரும் கல்லூரிகளுக்கு செல்லும் போது பேருந்தில் அடிக்கடி சந்தித்துள்ளனர்.  

இருவரும் வௌ;வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அப்பொழுது ராஜசேகர், ரம்யாவை காதலிப்பதாகக் கூறியுள்ளார்.  அதற்கு ரம்யா மறுத்துள்ளார். ஆனாலும் ராஜசேகர் விடாமல் பல முறை ரம்யாவிடம் தொடர்ந்து காதலிப்பதாக  கூறியுள்ளார். ராஜசேகரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரம்யா, நான் காதலிக்க மாட்டேன்,  நீ வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொள் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த 6 மாதம் முன்பு  ரம்யா வீட்டிற்கு வந்த ராஜசேகர் பெண் கேட்டுள்ளார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் முடியாது எனக் கூறி மறுத்துள்ளனர். அதன் பிறகு ரம்யாவும், ராஜசேகரை புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் வெள்ளிக்கிழமையன்று குறிஞ்சிப்பாடியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்த ஆசிரியை ரம்யாவை கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ராஜசேகரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை செய்த அன்று மதியம் ராஜசேகரின் சகோதரி ஆனந்தி  செல்பேசிக்கு அவர் அனுப்பிய சேதியில் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு  செல்பேசியை  அணைத்து விட்டார். 

ராஜசேகரில் செல்பேசி கோபுர சைகையை வைத்து காவல்துறையினர் அவரைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையாங்குளம் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் தனியாக நிற்பதாக திருநாவலூர் காவல்துறையினருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடன் சம்பவ இடத்திற்குச் சென்ற திருநாவலூர காவல்துறையினர் அங்கு மோட்டார் சைக்கிளில் நின்ற இடத்திற்கு அருகில் முந்திரி மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளி ஆசிரியை ரம்யாவை கொலை செய்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.