Show all

தமிழக மக்களுக்கும், அரசுக்கும் கிடைத்திட்ட பெரும்பேறு! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இதைக் கொஞ்சம் முறைப்படுத்தினால், ஏராளமான தமிழ்மக்களும் அவர்களுக்கு வாய்ப்பபை அளித்தமைக்காக அரசும் பயனடைய முடியும்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். 

இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். தமிழ்தொடர்ஆண்டு-5030 இல் (ஆங்கிலம்1929) சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் ‘சென்னை பணியாளர் தேர்வாணையம்’  இந்திய விடுதலைக்குப் பின், சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ என்று மாறிவிட்டது.

தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத்தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. 

இந்திய அளவில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழக அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது.

திராவிட இயக்கத்திற்கு முந்தைய காலத்தில் எல்லாம், இப்படியொரு நிறுவனம், அதன் தகுதித் தேர்வு, அந்தத் தேர்வில் கலந்து கொண்டால் தமிழக அரசில் அதிகாரியாக பணி வாய்ப்பு என்பதாக, ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட தகவல் தெரியாது. தகவல் தெரிந்தவர்கள் எல்லாம் பார்ப்பனியக் குடும்பங்கள். அவர்கள் மட்டும் ஓசையெழுப்பாமல் தேர்வு எழுதிய அனைவருக்கும் வேலை கிடைத்து மகிழ்ச்சியாக தமிழகத்தில் அதிகாரத்தை முன்னெடுப்பார்கள். 
திமுகவினர் ஆட்சிக்கு வந்த பிறகுதான், தங்கள் கட்சிக்காரர்களுக்கு வேலைபோட்டுத் தருவதற்கு இப்படியானதொரு அருமையான வாய்ப்பு இருப்பதை திமுக பகுதியாகப் பயன்படுத்திக் கொண்டது. அரசு அதிகாரிகளில் திமுகவினர் அதிகம் இடம்பெற்றிருப்பதற்கு இதுதான் காரணம். 

இன்றைக்கெல்லாம் கிராம நிருவாக அலுவலர் பணிக்கு தேர்வு என்று அறிவித்தவுடன், பெட்டிக்கடையில் விளம்பரம் தொங்குகிறது. கிராம நிருவாக அலுவலர் பணிக்கு பத்தாம் வகுப்புதான் கல்வித்தகுதி என்ற நிலையிலும், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம் படித்தவர்கள், மருத்துவக்கல்வி பெற்றவர்கள், மருத்துவர்கள் கூட விண்ணப்பிக்கிற நிலை இருக்கிறது. 

எப்படியாவது தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாக முறைகேடு செய்து, வேலை வாங்கி விட்டால், 58 அகவை வரை பணி நிரந்தரம், சாகும் வரை ஓய்வு ஊதியம் என்று முறைகேடு செய்வதில் பழக்கமும் துணிச்சலும் உள்ளவர்கள் முயல்கின்றனர். 

இதை சட்டம், தண்டனை என்பதினால் எல்லாம் முழுமையாக களைந்து விட முடியாமல், உண்மையாகப் போராடுகிறவர்கள் கண்விழி பிதுங்கி விடுகின்றார்கள். உபரி இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது. முதலாவதாக உபரியை கட்டுப்படுத்த வேண்டும். என்ன செய்யலாம் அந்தந்த வேலைகளுக்கான கல்வித் தகுதியை அதிகப் படுத்தலாம். அல்லது அகவைத் தகுதியை அதிகப் படுத்தலாம். 

வேலைக்கான கல்வித்தகுதியை அதிகப் படுத்துவதை விட, வேலைக்கான அகவையை அதிகப்படுத்தலாம். இந்தமுறையால் ஒவ்வொருவரும் கொஞ்சகாலமாகவாவது அரசுப் பணியையும் ஓய்வு ஊதியத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். 

ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பித்தவர்களில் வேலைக்குத் தேவையானவர்களை அகவை முதிர்வின் அடிப்படையில் பட்டியல் இடலாம். 

எடுத்துக்காட்டாக 500 வட்டாட்சியர் பணித் தேர்வுக்கு கீழ் கண்ட அகவை அடிப்படையில் விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற புள்ளிவிவரம் திரட்டப்பட்டிருக்குமேயானால் அந்த பணிக்கான அகவைத் தகுதி 35 அகவை என்று நிர்ணயித்து தேர்வை நடத்தி பெரும்பாலனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். 
50 அகவைக்கு மேல் 100 பேர்கள். 
40 அகவைக்கு மேல் 200 பேர்கள்.
35 அகவைக்கு மேல் 300 பேர்கள்
30 அகவைக்கு மேல் 400 பேர்கள்
25 அகவைக்கு மேல் 600 பேர்கள்
20 அகவைக்கு மேல் 800 பேர்கள்
என்ற நிலையிருந்தால்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.