செயலலிதா அவர்கள் வழியில் கச்சத்தீவை மீட்க தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் தமிழக முதல்;வர் எடப்பாடி பழனிச்சாமி. 19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த விழா மேடையில் கச்சத்தீவை மீட்பதற்காக மறைந்த முதல்வர் செயலலிதா உச்சஅறங்கூற்றுமன்றம் வரை சென்று சட்டப் போராட்டத்தை நடத்தினார். அவரது வழியில் கச்சத்தீவை மீட்க தமிழக அரசானது தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் தமிழக முதல்;வர் எடப்பாடி பழனிச்சாமி. இது வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான நாடகமாக இல்லாமல் உண்மையாக இருந்தால், தமிழக வரலாற்றில் பதிவாகி தமிழர்களால் காலம் காலமாகக் கொண்டாடப்படுவீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



