சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் இதே ஆண்டில் தீபவளிக்கான ஒருபடத்தின் அறிவிப்பும் வெளியாக சூர்யா கொண்டாடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் இதே ஆண்டில் தீபவளிக்கான ஒருபடத்தின் அறிவிப்பும் வெளியாக சூர்யா கொண்டாடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சூர்யாவைக் கதைத்தலைவனாக கொண்டு தயாரிக்கப்படவுள்ள சூர்யாவின் 39வது படத்;தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சூர்யாவின் 39-வது படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு வேலையாகவுள்ளார். சூர்யாவும், சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவின் 39-வது படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஹரி இயக்கத்தில் சூர்யா ‘அருவா’ என்ற படப்பெயரில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சூர்யா நடிக்கும் 39-வது படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் ஹரி இயக்குகிறார். ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம். இயக்குநர் ஹரியின் 16-வது படம் என்று தெரிவித்துள்ளது. இந்தப்படத்தில், இசையமைப்பாளர் டி.இமான் சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா- ஹரி இணைவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சிறப்பான வெற்றிப்படங்கள். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. எல்லாம் சரி கதைத்தலைவி யாரா? இன்னமும் கதைத்தலைவி தேர்வு முடியவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



