12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் கட்சியின் சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது கட்சியின் பெயர் நீதிமன்றத்தின் மாண்பையே கெடுக்கும் வகையில் இருப்பதால் அதற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏழை,எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ள விசயங்களின் விவரம் பின்வருமாறு: நடிகர் கமல் தொடங்கியுள்ள புது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் அறிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் குழப்பும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் என நடிகர் கமல் தன் கட்சிக்கு பெயரிட்டுள்ளார். எந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இது சாதாரண மக்களிடையே குழுப்பத்தை ஏற்படுத்தி கமல் கட்சியின் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ட பஞ்சாயது செய்யவே உதவும். ஆகவே ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும். அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதோடு கட்சி தொடக்க விழாவில் பேசிய கமல் தமிழக மக்களை 600 ரூபாய்க்கு வாக்குகளை விற்றவர்கள் என்றும் திருடர்கள் என்றும் கொச்சைப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். ஆகவே மக்கள் நல மய்யம் கட்சியை தடை செய்வதோடு கமல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் கமலின் கட்சியில் உள்ள சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நீதிமன்ற மாண்பை குறைக்கும் வகையில் கட்சியின் பெயர் இருப்பதாக குற்றம்சாட்டி அதற்கு தடை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. என்ன கமல்! பயந்திட்டிங்களா? அரசியலில் இதுவெல்லாம் இயல்புதானே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,708
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



