Show all

கல்கியின் பொன்னியின் செல்வன் புதிய வடிவத்தில்! அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முகப்பு பக்கத்திலேயே, 'வாருங்கள் நண்பர்களே, எங்கள் படக்கதையைப் படித்து ரசியுங்கள்!' என வந்தியத்தேவன் கட்டியம் கூறுகிறார். அதற்கு பின்பாட்டு போல், 'என்ன ஓய், வந்தியத்தேவரே, நீரே களத்தில இறங்கீட்டீரா?' என்று பட்டை நாமத்துடன், தடியை ஒய்யாரமாக நிறுத்தியபடி கேள்வி கேட்கிறார் ஆழ்வார்க்கடியான் நம்பி.

முதல் பக்கத்திலேயே ஆதிகாலத்து மின் விசிறி சுழல்கிறது. பழங்கால கடிகாரத்தில் 'டிங்-டாங்' சத்தத்துடன் பெண்டுலம் ஆடுகிறது. அதன் முன்னே நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதரை எங்கோ பார்த்திருக்கிறோமே. அட, நம்ம எழுத்தாளர் கல்கி.

கல்கி பேசுகிறார்: 'வணக்கம். நான் கிருஷ்ணமூர்த்தி. பொன்னியின் செல்வனின் வாசகர்களுக்கு வணக்கம். உங்களை ஆயிரம் ஆண்டுகள் பின்னுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் எண்ணலாம். என்னுடன் சில ஓவியர்களின் துணைகொண்டு அது சாத்தியப்படுமா என முயற்சித்து பார்க்கப்போகிறேன்!'

ஆம், சரவணராஜா. தன் நிலா படக்கதை நிறுவனம் மூலம் 30 ஓவியர்களின் துணைகொண்டு பொன்னியின் செல்வன் பாத்திரங்களை அசைவூட்ட  ஓவியங்கள் வடிவில் நமக்கு அழைத்துச் செல்ல தொடங்கியிருக்கிறார். இதுவரை நான்கு அத்தியாயங்கள் (நான்கு புத்தகங்களாக) வெளிவந்து பல பதிப்புகள் கண்டு, பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்து விட்டன. அநேகமாக தமிழில் பிரபலப்பட்ட முதன்மை நீண்டதொரு புதினம் இப்படி அசைவூட்ட ஓவியம் வடிவில் வருவது இதுவே முதல்முறை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,851.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.