Show all

தமிழகத்தில் வேகமாக பிரபலமாகி வரும் வேட்பாளர் காளியம்மாள்! அரசுகள் புறக்கணிக்கும் மீனவச் சமுதாயப்பெண்: முதன்மைக்காரணம்

சிட்டுக்குருவியைச் சுட்டா அதை கேட்க சட்டம் இருக்கு. ஆனா மீனவர்களை சுட்டால்... எங்களுக்கு யாரு இருக்கா? என்று சுருக்கென்றும், நறுக்கென்றும் கேள்வி கேட்கிறார் காளியம்மாள்!

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர்தான் காளியம்மாள். கடந்த  10 ஆண்டுகளாகவே மீனவ மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார் காளியம்மாள்! காளியம்மாளின் எளிமையான தோற்றமும், உறுதியான பேச்சும் மக்களை சீக்கிரமாக ஈர்த்து கொண்டு போய்விட்டது. சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் காளியம்மாள் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது சொல்லும்போதுகூட, 'தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மாற்றத்திற்கான கட்சியாகதான் நாம் தமிழர் கட்சி உள்ளது. மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து அதனை சரிசெய்யும் திட்டவரைகள் எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. நாங்கள் மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறோம்' 

நான் பாராளுமன்றம் சென்றால் பாராளுமன்றத்தில் மக்கள் உரிமைகளை கேட்டு பெறுவேன். இல்லையென்றால், அதே பாராளுமன்றத்தில் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராடுவேன் என்கிறார் காளியம்மாள். காளியம்மாளின் இந்த பேச்சுதான் பெரும்பாலான இளைஞர்களை ஈர்த்துள்ளது. எளிமையான வேட்பாளர் எப்படியும் மீனவ சமுதாய மக்களின் வாக்குகளை காளியம்மாள் நிச்சயம் பெறுவார் என்ற அளவுக்கு இவரது கருத்துப்பரப்புதல் மக்களை ஈர்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது. எந்தவித பின்புலமும் இல்லாமல் கருத்துப்பரப்புதலில் கலக்கி வருகிறார் இந்த எளிமையான வேட்பாளர். வெற்றிபெற மனமுவந்து வாழ்த்துவோம்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,109.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.