திறந்த வெளி வேனில் சென்று ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் கருத்துப்பரப்புதல் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து எங்கிருந்தோ ஒரு செருப்பு வீசப்பட்டது. 18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் கூட்டணியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி எதிர்த்துப் போட்டியிடுகிறது. கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் கருத்துப்பரப்புதல் செய்துவருகிறார்கள். இந்நிலையில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார். திறந்த வெளி வேனில் சென்று ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசிக்கொண்டிருந்தபோது அவரைக் குறிவைத்து எங்கிருந்தோ ஒரு செருப்பு வீசப்பட்டது. முதல்வர் எடப்பாடி நூலிழையில் தப்பித்த நிலையில் அவருக்கு அருகில் நின்ற த.மா.வேட்பாளர். என்.ஆர். நடராஜனை வீசப்பட்ட செருப்பு தாக்கிது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் முதல்வரைப் பாதுகாப்பாக வேறுபகுதிக்கு அழைத்துச் சென்றனர். செருப்பு வீசியவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,109.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.