தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிய கடிதத்தால், காவல் ஆய்வாளரை “தமிழை யார் காப்பான்” என்று வருந்தச் செய்த கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள். 05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிக்கரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் சூர்யா ரசிகர்கள் சிலர் காவல்துறை அனுமதியேதும் இல்லாமல், மேளதாளங்களுடன் ஊர்வலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளனர். புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், இவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார். கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களிடம் இதுபோன்று முன்அனுமதி பெறாமல் ஊர்வலம் செல்வது, பதாகை வைப்பது போன்றவை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். அதன்பின் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடமாட்டோம் என கடிதம் எழுதி கொடுக்கச் சொல்லி உள்ளார். கடிதம் எழுதிய ஆறு மாணவர்களும் தப்பும் தவறுமாக தமிழை எழுதி உள்ளனர். அதனை ஆய்வாளர் தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த முகநூல் பதிவில், மனதை திடப்படுத்திக் கொண்டுதான் அந்தக் கடிதங்களைப் படித்;தேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது. இந்த கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால் யார் 'காப்பான்” இவர்களையும் இவர்களின் தமிழையும் என்று பதிவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,283.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



