Show all

திண்டுக்கல் சீனிவாசன்: "செயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு"

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அ.தி.மு.க சார்பில் காவிரி மீட்புப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

செயலலிதாவால் கேடி, ரவுடி என்று ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரனோடு 18 பேர் போயிட்டு, இன்னிக்கு மகாத்மா காந்தி, புத்தரைப் போல் பேசுகிறார்கள் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுதுன்னு சொன்னா கேட்பவனுக்கு எங்க போச்சு அறிவுன்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி இருக்கு. என்னமோ பெருசா தியாகம் செஞ்சவங்க மாதிரியும், இவங்கனாலதான் கட்சி வளர்ந்த மாதிரியும், இவங்கனாலதான் ஆட்சி நடக்குற மாதிரியும் 18 பேர் போனா நாசமா போயிடுவோம்ங்கிற மாதிரியும் பேசிக்கிட்டு திரியறாங்க.

ஆளுநர் கிட்ட போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை நீக்க வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகு, உண்மையிலேயே அரசியல் சட்டப்படி, அரசியல் சாணக்கியப்படி, பேரவைத் தலைவர் ஒரு தலைமையை ஏற்று அவரை முதலமைச்சர் ஆக்கிய பிறகு, பதினெட்டு பேர் மனுக்கொடுக்குறாங்க. பேரவைத் தலைவர் முறைப்படி அவங்களுக்கு அவகாசம் கொடுத்தாரு. அந்த அவகாசத்தைப் பெற்று அதன் பிறகும் வராமல் அவங்க பாட்டுக்கு மைசூர், அமெரிக்கான்னு ஜாலியா சுத்திட்டு இருந்தாங்க. 'செயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு' என்று பேசிய பேச்சு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.