செப்டம்பர்1 இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனச் சோதனை நடத்துவதில் உற்சாகம் அடைந்து வருகிறார்கள். அசல் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிக்கப் பட்டனர். அவர்களுக்கு காவல்துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர். சென்னையில், அண்ணாசாலை, கடற்கரைச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பெரம்பூர் பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினார்கள். அசல் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் பலரை பிடித்து காவல்துறையினர் அசல் உரிமம் இல்லாத பலரிடம் ரூ.500 அபராதம் வசூலித்தனர். இன்று முதல் அசல் உரிமம் இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நகரில் இன்று காலை மழை பெய்ததால் தாமதமாக வாகன ஆய்வு பணி தொடங்கியது. பெரும்பாலானோர் அசல் உரிமம் கட்டாயம் எடுத்து வந்து இருந்தனர். இந்த வாகன சோதனை தொடரும். வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கட்டாயம் அசல் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், வாகன ஒட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என சென்னை உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர், அசல் ஓட்டுநர் உரிமம் தேவை எனக் கூறியிருந்தார். இந்நிலையில், லாரி சம்மேளன சங்கம் சார்பில் அசல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதை எதிர்த்து சென்னை அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்னர். இந்த வழக்கு அறங்கூற்றுவர் துரைசாமி முன்னர் விசாரணைக்கு வந்தது அப்போது அறங்கூற்றுவர் கூறுகையில், வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இந்த உத்தரவு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மோட்டார் வாகன சட்டம் 139ன்படி அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை எனக் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



