Show all

ரூ.7 உயர்ந்தது மானிய சமையல் எரிவாயு உருளை விலை

மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளை மீதான விலை இன்று 7 ரூபாய் உயர்ந்துள்ளது. 2018 மார்ச் மாதத்திற்குள் சமையல் எரிவாயுவிற்கு உள்ள மானியத்தினை மொத்தமாக நீக்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.

     மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் 14.2 கிலோ உருளை ஒன்றின் மீதான விலை டெல்லியில் 479.77 ஆக இருந்தது. அது தற்போது 487.18 ஆக உயர்ந்துள்ளது.

     சென்னையில் 14.2 கிலோ சிலிண்டர் ஒன்றின் மீதான மானிய விலை 468.50 ரூபாயில் இருந்து 475.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.

     அதே நேரம் மானியம் இல்லாத உருளைகள் மீதான விலையினை 73.5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.