17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு கட்சியில் முதன்மைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவி அம்மா பேரவைக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி. ரவீந்திரநாத்துக்கு புரட்சி தலைவி அம்மா பேரவையின் தேனி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே மற்றொரு அமைச்சரான ஜெயக்குமாரின் மகனும், தென் சென்னை தொகுதி அதிமுக பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்த்தனுக்கு புரட்சித் தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். எதுக்கப்பா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? தேர்தலுக்கு அப்புறமும் ஒங்க கட்சி இருக்குமா என்ன என்கிறார்கள் மக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



