17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கடந்த நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1,194 நன்கொடைகள் பாஜக பெற்றதாகவும் அவற்றின் மதிப்பு 532 கோடி ரூபாய் என்று பாஜக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாஜக அடுத்தபடியாகக் காங்கிரஸ் கட்சி 599 நன்கொடைகள் மூலம் 41.90 கோடி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தேசிய கட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் மட்டும் 710.80 கோடி ரூபாய் வருவாய்ப் பெற்றுள்ளதாக வருமான வரி பதிகையின் போது குறிப்பிட்டுள்ளன என அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் பாஜக மட்டும் 464.84 கோடி ரூபாய் ஆதாரங்கள் இல்லா வருவாய் ஆகப் பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் கட்சி கூப்பன்கள் விற்றதன் மூலம் 115.64 கோடி ரூபாய் வருவாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கார்ப்ரேட்டுகளிடம் இருந்து பாஜக 515.43 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. காங்கிரஸ் 36.06 கோடி ரூபாய் பெற்றுள்ளது. தனிநபர்களிடம் இருந்து பாஜக 16.82 கோடி ரூபாயும் காங்கிரஸ் 5.84 கோடி ரூபாயும் நன்கொடை பெற்றுள்ளது. அதிகம் நன்கொடை அளித்த நிறுவனங்கள் சத்யா எலெக்ட்ரோல் அறக்கட்டளை பாஜகவுக்கு 251.22 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சிக்கு 13.90 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



