Show all

பாஜக அரசின் வழக்கமான பாணியில், புதிய மோட்டார் வாகனச் சட்டமும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலாக உள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் அபராதத்தை இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மேலும் உயர்த்தியுள்ளது. 

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக அரசின் வழக்கமான பாணியில், புதிய மோட்டார் வாகனச் சட்டமும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலாக உள்ளது.

இந்தப் புதிய சட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றாதவர்கள், சரியான ஆவணம் இன்றி வாகனத்தை ஓட்டுபவர்கள், மது குடித்து விட்டு வண்டியை ஓட்டுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதமும், தண்டனையும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

இதில் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், சடுதிவண்டி, தீயணைப்பு துறை வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழி விடாமல் சிரமத்தை ஏற்படுத்தினால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் வசூலிக்கப்படும். 

முறையான ஆவணமின்றி வாகனங்கள் செயல்பட்டால் 5 ஆயிரம் ரூபாய், காலவதியான ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தினால் 10000 ருபாய், சாலை விதிகளை மீறினால் 500 ரூபாய் வரைக்கும் அபராதம் கூடியுள்ளது. 

பொதுமக்கள், போக்குவரத்துக் காவலர்களைப் பார்த்த உடனே வண்டியை திருப்பிக் கொண்டு வேகமாக ஓட்டி தப்பிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். உண்மையில் அவர்களிடம் சாலையில் வண்டியோட்டுவதற்கான முழுத் தகுதியோடு அனைத்து ஆவணங்களையும் வைத்தே இருப்பார்கள். எல்லாம் சரியாக இருப்பதாக ஆவணப்படுத்தியவர்களை கூட எதிர்த்து பேசினீர்கள், பணிசெய்ய விடாமல் தடுத்தீர்கள் என்றெல்லாம் கூட காவலர்களின் அத்துமீறல் அனுபவம் நிறைய பேர்களுக்கு இருக்கவே செய்கிறது. உண்மையிலேயே தண்டிக்கப் படுகிறவர்கள் எல்லாம் தவறு செய்தவர்களாக இருப்பதில்லை என்பது மக்களின் கோபமாக இருக்கும் நிலையில், இது போன்ற அபராதம் அதிகரிப்பு, தண்டனை அதிகரிப்பு எல்லாம் சுமையே என்று பொதுமக்கள் நடுவில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அதிகாரத்தை சாலையைச் சீரமைப்பதில் ஏன் காட்ட மறுக்கிறது எந்த அரசும்? என்றும் மக்களுக்கு கோபம் .  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,260.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.