09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிக அதிக அளவில் மிடுக்குப்பேசி பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடுக்குப்பேசி பயன்படுத்துவேரின்;;; எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடி பேர் மிடுக்குப்பேசி பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் மிடுக்குப்பேசி பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் மிடுக்குப்பேசி பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்து உள்ளது. வலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் மிடுக்குப்பேசி பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மிடுக்குப்பேசி பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். விஞ்ஞானம் என்பதே அளவாக பயன்படுத்தும் வரைதான் அதை நாம் நம்மை அடிமையாக்கலாம்;! அளவிற்கு மிஞ்சினால் விஞ்ஞானத்திற்கு நாம் அடிமை! என்பது தானே நம்ம குடும்பப் பெரியவர்கள் நீண்ட காலமாக நமக்கு உணர்த்தி வரும் செய்தி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,765.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



