09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதைக் கண்டு மனம் வெந்து, இரண்டு கோடி இயற்கை ஆர்வலர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்கள். மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்தி வருகிறார்கள் என்பதை அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது. 'கேலார்டு நெல்சன்' என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முதன்மையானவர். அதனைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் சித்திரை ஒன்பதாம் நாளை (ஏப்ரல் 22) புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள். 28 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா அவையால் 'புவி நாள்' அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது. அந்த ஆண்டு, 141 நாடுகளிலிருந்து மொத்தம் 20 கோடிக்கும் அதிகமானோர் புவி நாளுக்;கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள் அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் புவி மீது அக்கறைகொண்டவர்கள், தங்களால் ஆன விழிப்பு உணர்வை உலகத்துக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாழும் இந்தப் பூமியைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் உறுதிமொழியை ஏற்போம். நெகிழி பயன்படுத்த மாட்டோம் முடிந்தவரை தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம், காற்று மாசுபடும் எந்த ஒரு விசயத்தையும் நாம் செய்ய மாட்டோம். உழவுத் தொழிலை உயிருக்கு மேலாய் கொண்டாடுவோம், என ஏதாவது ஓர் உறுதிமொழியை எடுக்க வேண்டும். மோடியை இந்தியத் தலைமை அமைச்சராக வைத்துக் கொண்டு அந்த மாதிரி உறுதிமொழியெல்லாம் நாம் எப்படி எடுப்பது? மீத்தேன், நியுட்ரினோ, கெயில் எரிவாயு, ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காவிரி கழிமுகத்தை பாலைவனமாக்கும் முயற்சி என பூமிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மோடியிடமிருந்து தான் தொடங்கியிருக்கின்றன. நாம் மாறினால், நாடு மாறும். நாடுகள் மாறினால், பூமி வாழும் என்பது ஆன்றோர் மொழி! என்றெல்லாம் மோடி ஆட்சி இருக்கும் வரை உறுதிமொழி எடுக்க முடியாது. இப்போதைக்கு அடுத்த புவியாண்டையாவது புவியைக் காப்பாற்றும் உறுதிமொழிகளோடு கொண்டாட மோடி ஆட்சியை அகற்ற உறுதி மொழியெடுப்போம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,765.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



